பன்றி பண்ணைகளை அண்மித்த பகுதிகளில் தொற்றுநோய் பரவுவதாக கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்தில் இந்நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பன்றி பண்ணைகளைச் சுற்றி பரவும் PRRS எனப்படும் இந்த தொற்றுநோய் நிலைமை 2020 இல் இலங்கையில் அடையாளம் காணப்பட்டதாகவும், அப்போது தேவையான தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டு பன்றிகளுக்கு வழங்கப்பட்டதால் தொற்றுநோய் நிலைமை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், பன்றிப் பண்ணை உரிமையாளர்களால் அண்மைக்காலமாக தடுப்பூசிகள் இடைநிறுத்தப்பட்டமையினால் தொற்றுநோய் நிலைமை மீண்டும் மோசமடைந்துள்ளதாக கால்நடை உற்பத்தி விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
மேல்மாகாணத்தை சூழவுள்ள இந்த நிலைமை கலேவெல, வஹாக்கோட்டை, மாத்தளை, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளிலும் பரவியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.