வவுனியாவில் உள்ள பல இந்து ஆலயங்கள் நீண்ட காலமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் கணக்கறிக்கை காட்டாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது தொடர்பில் சமூக ஆர்வலர்கள் சிலர் கருத்து தெரிவிக்கையில், வவுனியாவில் பல இந்து ஆலயங்கள் நீண்ட காலமாக ஆலயத்தின் வரவு செயலவு தொடர்பில் கணக்கறிக்கையை பொதுச்சபைக்கு வெளிப்படுத்தாததுடன் பொதுக்கூட்டங்களையும் நடத்தாமலும் காலதாமதமாக்கி வருகின்றனர்.
இதன் காரணமாக நிதி மோசடிகள் இடம்பெற வாய்ப்புக்கள் உள்ளது. இவை தொடர்பில் இந்து கலாசார உத்தியோகத்தர்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவையுள்ளது.
எனினும் பதிவு செய்யப்பட்ட ஆலயங்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் மாவட்ட மற்றும் பிரதேச கணக்காய்வு உத்தியோகத்தர்கள் மூலமாக கணக்காய்வுகளை மேற்கொண்டு நிதி மோசடிகள் இடம்பெற்றுள்ளதா நிர்வாகத்தினர் நிதிகளை கையாளும் போது முறைக்கெடுகள் இடம்பெறுகின்றதா என்பதனை ஆராய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வவுனியாவில் அண்மைக்காலமாக ஆலயங்களில் அதிகளவான நிதி புரழ்வு இடம்பெறுகின்றபோதிலும் இவற்றுக்கான கணக்காய்வுகள் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்தனர்.