டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

டெங்கு தொற்றின் அதிக அபாயம் உள்ள பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்ட வைத்திய அதிகாரி பிரிவுகளின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கடந்த வாரத்தை விட 24 மேலதிக சுகாதார வைத்திய அதிகாரி பிரவுகளில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் வெப்பமான மற்றும் இடைவிடாத மழையுடன் கூடிய காலநிலையே டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு அதிக காரணமாக அமைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரங்களுடன் ஒப்பிடுகையில், நாளாந்தம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளதுடன், இந்த வாரத்தில் மட்டும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 800 ஐ தாண்டியுள்ளதாக வைத்தியர் லஹிரு கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.

இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 39 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என டெங்கு கட்டுப்பட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version