மலையக பெருந்தோட்ட சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பங்களிப்பும் அவசியம் எனவும், அதற்காக உரிய ஏற்பாடுகளை செய்து கொடுக்குமாறு ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனிடம், தாம் கோரிக்கை விடுதிருப்பதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டனுடன் இன்று (01.06) இடம்பெற்ற பேச்சு வார்த்தையின்போதே இந்த விடையத்தை அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, நெருக்கடியான காலகட்டத்தில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியம் வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு மலையக மக்களின் சார்பில் நன்றி தெரிவித்த அவர், மலையக மக்களின் தற்போதைய நிலைவரம் பற்றியும் எடுத்துரைத்துள்ளார்.
அத்துடன், மலையக மக்களுக்கான பொருளாதார மேம்பாட்டு வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிமுறைகள் மற்றும் அரசால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.