உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்போட்டி – ஆஷி சிறந்த துடுப்பாட்டம்

இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் நேற்று (07.06) தி ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது. இரண்டாம் நாளான இன்று அவுஸ்திரேலியா அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டம் நிறைவுக்கு வந்தது. ஆரம்பத்தில் தடுமாறிய அவுஸ்திரேலியா அணி ரவிஸ் ஹெட், ஸ்டீபன் ஸ்மித் ஆகியோரது அபாரமான இணைப்பாட்டம் மூலம் மீள்ச்சி பெற்றது. இருப்பினும் இன்று காலை இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அவுஸ்திரேலியா அணியின் இணைப்பாட்டங்களை முறியடித்து விக்கெட்களை கைப்பற்றி ஆஷி அணியை கட்டுப்படுத்தினர்.

இணைப்பாட்டமாக 285 ஓட்டங்களை ரவிஸ் ஹெட், ஸ்டீபன் ஸ்மித் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர். முதல் 3 விக்கெட்கள் 76 ஓட்டங்களை பெற்ற வேளையில் வீழ்த்தப்பட்டன. இறுதி 07 விக்கெட்கள் 108 ஓட்டங்களுக்குள் வீழ்த்தப்பட்டன.

ரவிஸ் ஹெட் 163(174) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். ஸ்டீபன் ஸ்மித் 121(268) ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். அலெக்ஸ் கேரி 48 ஓட்டங்களையும், டேவிட் வோர்னர் 43 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் மொஹமட் சிராஜ் 04 விக்கெட்களையும், மொஹமட் ஷமி, ஷர்தூள் தாகூர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்தியா அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version