இலங்கை, இந்தியா நாடுகளுக்கிடையிலான வலுசக்தி இணைப்பு ஒப்பந்தம் இந்த வருடம் ஜூலை மாதத்தில் கைச்சாத்திடப்படுமென செய்தி வெளியாகியுள்ளது. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அடுத்த மாதம் 20 ஆம் திகதி இந்தியாவுக்குக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாகவும், அதன்போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுமென தகவல் வெளியாகியுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதிவியேற்றதன் பின்னர் முதற்தடவையாக இந்தியாவுக்கு பயணிக்கவுள்ளார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியான காலத்தில் இந்தியா 4 பில்லியன் டொலர்கள் கடன் உதவிகளை இலங்கைக்கு வழங்கி வைத்தது. இதனை விட மேலும் பல உதவிகளும் வழங்கப்பட்டன.
2030 ஆம் ஆண்டளவில் இந்தியா – இலங்கை இணைப்பு பூர்த்தியாகுமென வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர ஏற்கனவே கூறியிருந்தார். இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியின் டெல்லிக்கான விஜயத்தின் போது இந்தியாவுடனான இந்த திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் என நம்பப்படுகிறது. இந்தியா ஏற்கனவே இந்த திட்டத்துக்கண முதலீட்டாளர்களை இனம் கண்டுள்ளது.