உலகின் மிகப் பெரிய மற்றும் பெரிய சிறுநீரகக் கல்லை (கால்குலஸ்) சத்திரசிகிச்சை மூலம் அகற்றி கொழும்பு ராணுவ மருத்துவமனை கின்னஸ் சாதனைகளில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு இராணுவ மருத்துவமனையின் சிறுநீரக மருத்துவர் லெப்டினன்ட் கேணல் கே. சுதர்சன், கப்டன் டபிள்யூ.பி.எஸ்.சி பத்திரத்ன மற்றும் கலாநிதி தமாஷா பிரேமதிலக்க ஆகியோர் இந்த சாத்திரசிகிச்சயை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், கேணல் யு.ஏ.எல்.டி.பெரேரா மற்றும் கேணல் சி.எஸ். அபேசிங்கவும் இதற்கு பங்களித்துள்ளனர்.
கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வைத்தியர்களால் அகற்றப்பட்ட கல் 13.372 செ.மீ நீளமும் 801 கிராம் எடையும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய கின்னஸ் சாதனையின்படி, 2004 ஆம் ஆண்டில், உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல் அகற்றிய சிகிச்சை மேற்கொண்ட நாடக இந்திய பதிவாகியிருந்தது, இந்திய சத்திர சிகிச்சை மூலம் அகற்றிய கல் 13 செ.மீ. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
