குருந்தி விகாரைக்கான காணி பகிர்ந்தளிக்கப்படவில்லை – சமன் ஏக்கநாயக்க!

முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணி அரச காணி எனவும் அதனை எவருக்கும் பகிர்ந்தளிப்பதற்கு தீர்மானிக்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் முல்லைத்தீவு குருந்தி விகாரைக்கு சொந்தமான காணிக்குள் தமிழ் மக்களைக் குடியேற்றப் போவதாக ஊடகங்களில் வெளியான செய்திகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மறுத்துள்ளார்.

ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று (15.06) மாலை நடைபெற்ற புதிய கடவுச்சீட்டு விண்ணப்ப முறையை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முல்லைத்தீவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க குருந்தி விகாரைக்கு சொந்தமான காணிக்குள் சிங்களவர்களோ, தமிழர்களோ, முஸ்லிம்களோ குடியேற்றப்பட மாட்டார்கள் என கலாநிதி எல்லாவல மேதானந்த தேரருக்கு உறுதி கூறினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version