சக ஊழியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படுவதை கண்டித்து அரசு மருந்தாளுனர்கள் முன்னெடுத்த அடையாள வேலை நிறுத்தம் இன்று (17.06) வாபஸ் பெறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அதிகாரிகள் தமது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தவறினால், தொழிற்சங்கப் போராட்டத்தைத் தொடரப்போவதாக அரச மருந்தாளர் சங்கம் உறுதியளித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் 23 மருந்தாளுனர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு மருந்தாளுனர்கள் நேற்று 24 மணி நேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை முடங்கியதால், நோயாளிகள் பாதிக்கப்பட்டிருந்தனர்.