ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிரான்ஸ், இங்கிலாந்திற்கு பயணித்துள்ள நிலையில், அவர் வரும் வரை பதில் நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர்களாக, ஷெஹான் சேமசிங்க மற்றும் பிரேமித பண்டார தென்னகோன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி நிதியமைச்சராக ஷெஹான் சேமசிங்கவும், பாதுகாப்பு அமைச்சராக பிரேமித பண்டார தென்னகோனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உயர்மட்ட தூதுக்குழுவினருடன் இன்று (06.17) அதிகாலை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு சொந்தமான விமானத்தில் நாட்டை விட்டு வெளியேறினார்.