நியமனம் பெற்றகொண்ட போதிலும் பணியில் இணையாத மருத்துவர்கள்!

இந்த வருடம் வைத்தியர்களாக நியமிக்கப்பட்ட 1,300 பேரில் 100 பேர் பணியில் இணையவில்லை என தரவுகள் வெளியாகியுள்ளன.

நியமனம் பெற்ற சுமார் 50 வைத்தியர்கள் நியமனக் கடிதங்களை பெற்றுக் கொள்ள வரவில்லை எனவும் சுமார் ஐம்பது பேர் நியமனக் கடிதங்களை ஏற்று பணிக்கு சமூகமளிக்கவில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

இதே நிலை நீடித்தால், எதிர்காலத்தில் சுகாதாரத் துறை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவ சேவையில் இணைந்துகொள்ளும் வைத்தியர் ஒருவரின் அடிப்படை சம்பளம் 54,000 ரூபா எனவும் அதற்கமைய அவரின் நாளாந்த சம்பளம் 2000 ரூபாவை அண்மித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த ஊதியத்தை கொண்டு, வைத்தியர்கள் அவர்களது கனவுகளை அடைய கஷ்டமாக உள்ளதால் பல வைத்தியர்கள் மருத்துவ துறையில் நிலைத்து நிற்பதில்லை எனவும் வைத்தியர் ஹரித அலுத்கே மேலும் தெரிவித்துள்ளார்.

விசேட வைத்தியர்கள் உட்பட பெருமளவான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் ஹம்பாந்தோட்டை, அனுராதபுரம், கந்தளே, தெஹியத்தகண்டிய போன்ற வைத்தியசாலைகளின் திணைக்களங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு வைத்தியசாலையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்துள்ளார்.

மேலும், மதிப்பைக் கணக்கிட்டு மருத்துவர்களின் சம்பளம் உரிய முறையில் வழங்கப்பட வேண்டும் எனவும் சுகாதாரத் துறை பாதுகாக்கபட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடற்ற வரிக் கொள்கை மற்றும் பொருளாதார அழுத்தம் காரணமாக வைத்தியர்கள் மற்றும் ஏனைய அரச மற்றும் தனியார் துறை வல்லுநர்கள் வீடுகளை விற்று வெளிநாடு செல்லும் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version