காற்று மாசுபாட்டால் இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

காற்று மாசுபாடு உலகின் ஏனைய பகுதிகளைப் போன்று இலங்கையிலும் இதய நோய் அபாயத்தை அதிகரித்துள்ளதாக உயர் இருதயநோய் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதயநோய் நிபுணர் டாக்டர் அனிது பத்திரன ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ”காற்று மாசுபாடு ஒரு குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் கவலையாக நீண்ட காலமாகக் கருதப்பட்டது. ஆனால் மனித ஆரோக்கியத்தில் அதன் தாக்கம் இப்போது அதிகரித்து உள்ளது’

‘நீங்கள் மோசமான தரமான காற்றை சுவாசிக்கும்போது காற்று மாசுபடுத்திகள் உங்கள் நுரையீரல்கள் மற்றும் உங்கள் இதயம் வழியாக இரத்த ஓட்டத்தில் ஆழமாக செல்ல முடியும். இது உங்கள் இதயம் மற்றும் சுற்றோட்ட நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கும்

இலங்கையில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால்இகாற்று மாசுபாட்டுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்க பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது இன்றியமையாதது” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version