இலங்கையில் HIV தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கையில் எயிட்ஸ் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய சுகாதார சேவை திணைக்களம் வெளியிட்டுள்ள தகவலின் படி, ஒரு வருடத்திற்குள் 620 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 81 இறப்புகள் பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆணுறைகளின் சீரற்ற பயன்பாடும் இதற்கு பிரதான காரணம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி கடந்த ஆண்டு பதிவான ஒட்டுமொத்த தொற்றுக்களுடன் ஒப்பிடும்போது இந்த வருட முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச்) 13 வீத அதிகரிப்பு பதிவாகியுள்ளது. முதல் காலாண்டில் 165 புதிய நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். 15 இறப்புகள் பதிவாகியுள்ளன.

எனினும் 2022 ஆம் ஆண்டுக்குள் மொத்தம் 1520 எயிட்ஸ் தொடர்பான இறப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version