உள்நாட்டு கடனை மறுசீரமைக்கும் வேலைத்திட்டம் இன்னும் நிறைவடையவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது குறித்து ருவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள அவர், வங்கி மற்றும் நிதித்துறையில் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
முடிவுரை இல்லாத அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் சந்தை நம்பிக்கை வீழ்ச்சியடையக்கூடும் எனத் தெரிவித்த அவர், பொறுப்புடன் அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டின் கடனை மறுசீரமைப்பது தொடர்பில் இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், சாதகமான உடன்பாட்டை எட்டுவதற்கு நம்பிக்கை உள்ளதாகவும் அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.