கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – சஜித்!

சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில், எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒரே குரலில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணைய வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஷ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (19.06) கூடிய எதிர்க்கட்சி ஒன்றியத்தின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், ‘தங்கள் சொந்த எண்ணங்களின் பிரகாரம் அவசரப்பட்டு சர்வதேச நாணய நிதியத்தால் சொல்லப்படுவதை ஒத்துக்கொள்ளும் சூழ்நிலையில், நாட்டிற்கு நடந்த அழிவுகள் கண்ணெதிரே தெரிகிறது.

எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து உண்மைகளையும் வெளிப்படுத்தி, எதிர்க்கட்சியும் அரசாங்கமும் ஒரே குரலில் தேசிய கடன் மறுசீரமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஒன்றிணையுங்கள்.

கட்சி,நிறம்,மதம்,சாதி வேறுபாடின்றி நாடாளுமன்றத்திலுள்ள 225 உறுப்பினர்களும் ஒரே குரலில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் பட்சத்தில், சர்வதேச நாணய நிதியத்திற்குத் தெளிவான தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

ஊழியர் சேம நிதியம்,ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபை மற்றும் ஓய்வூதியம் உட்பட அனைவரின் வைப்புத் தொகைகளையும் பாதுகாக்க முடியும். அத்துடன் இந்நாட்டு மக்களின் வைப்புத் தொகைகளின் பெறுமதியைப் பாதுகாக்கத் தயாராக இருந்தாலும் அரசாங்கம் சொல்வதெற்கெல்லாம் கை தூக்கத் தயாராக இல்லை.

சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் செய்து கொள்ளவுள்ள ஒப்பந்தம் மக்கள் தரப்பில் வலுப்படுத்தி முற்போக்காக செயல்படுத்தும் சாத்தியம் இருந்தும், அது நடக்கவில்லை. இந்த தரவுகள் நாட்டிற்கும் பாராளுமன்றத்திற்கும் தெரியாமல் மறைக்கப்பட்டுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பை மேற்கொள்ளாது சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தங்களுக்குச் செல்லலாம் என்பதிலும் இலங்கையால் இவ்வாறானதொரு ஒப்பந்தத்திற்குச் செல்ல முடியாது என்பதற்குமிடையில் ஏதோ மறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version