இலங்கைக்கு 700 மில்லியன் டொலர்களை வழங்கும் உலக வங்கி!

உலக வங்கியின் நிர்வாகக் கூட்டம் இம்மாதம் 28 ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது இலங்கைக்கான வரவு செலவு திட்டம் மற்றும் நலன்புரி ஆதரவில் 700 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரசயில் வட்டாரங்களின் மூலமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் பொருளாதாரம் அடுத்த ஆண்டு வளர்ச்சி பாதைக்கு திரும்புவதற்கு முன்னர், வீழ்ச்சியானது 2 சதவீதத்தால், குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சர்வதேச நாணய நிதியம் மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 3 பில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதுடன், முதற்கட்டமாக ஒரு தொகுதியை வழங்கியுள்ளது.

இதற்கிடையே முன்மொழியப்பட்ட உலக வங்கி நிதியானது இரண்டு தவணைகளாக இலங்கைக்கு கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் தவனையில் 250 மில்லியன் கிடைக்கவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இலங்கையின் கடன் மறுசீரமைப்பின் முன்னேற்றம் மற்றும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஐ.எம்.எஃப் வேலைத்திட்டத்தின் முதல் மீளாய்வு ஆகியவற்றை உலக வங்கி அவதானித்து வருவதால், சபையின் ஒப்புதலுக்குப் பின்னர் முதற் தவணை கொடுப்பனவு உடனடியாக வழங்கப்படலாம் என உலக வங்கி வட்டாரம் மூலம் தகவல் கசிந்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version