இலங்கையில் கால்நடைகளுக்கான தீவனம் வளர்க்க சீனர்களின் புதிய திட்டம்!

ஹம்பாந்தோட்டை பகுதியில் விளைநிலம் அல்லாத பகுதியில் அல்ஃப்ல்ஃபா எனும் ஒரு வகை கால்நடைகளுக்கான தீவனம் வளர்ப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை முன்னெடுக்க சீன நிறுவனமொன்று முன்வந்துள்ளதுடன், அதன் தூதுக்குழுவினர் நேற்று (19.06) விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பில் குறித்த புதிய திட்டம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.

அல்ஃப்ல்ஃபா கால்நடைகளுக்கு உணவாக வழங்கப்படும் ஒரு புல் வகை எனவும் தற்போது நாட்டில் இந்த தாவரம் பயிரிடப்படவில்லை எனவும் விவசாய அமைச்சு சீன பிரதிநிதிகளுக்கு தெரிவித்துள்ளது.

எனினும், இத்திட்டத்தின் கீழ் விளைவிக்கப்படும் தாவரம் தயார் செய்த பின், சீனாவுக்கு ஏற்றுமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தாவரத்தை கால்நடை தீவனமாக பதப்படுத்த தொழிற்சாலை மற்றும் அலுவலக வளாகம் கட்டவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version