நாட்டை சீரழித்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவில்லை – சஜித்!

விவசாயிகள் மற்றும் நுகர்வோர் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச பராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.

பாராளுமன்றத்தில் இன்று (20.06) இடம்பெற்ற நிலையியற் கட்டளை 27/2 கீழ் பல்வேறு கேள்விகளை எழுப்பி உரையாற்றுகையில் அவர் இந்த விடயங்கை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

பயிர் செய்கைகளுக்கு இரசாயன உரங்களை பயன்படுத்துவதை தடை செய்து, சேதன உரங்களை மட்டுமே இட வேண்டும் என்ற அரசாங்கத்தின் முடிவால், விளைச்சல் அழிந்து, விவசாயிகள் உட்பட ஒட்டுமொத்த மக்களும் நிர்க்கதியாகியுள்ளதாக தெரிவித்த சஜித் பிரேமதாச, நானோ நைட்ரஜன் உரங்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை மேற்கொண்டமையால், நாட்டின் நிதி வளம் பயனற்ற செயல்களுக்குச் செலவிடப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற தவறான முடிவுகளால் ஒட்டுமொத்த மக்களையும் பாதிப்புக்குட்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை என சுட்டிக்காட்டிய அவர், இழப்புக்களை ஈடுகட்டத் தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை அரசாங்கம் நாளுக்கு நாள் தாமதப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

சந்தையில் விற்பனை செய்யப்படும் அரியின் விலையுடன் ஒப்பிடும்போது நெல்லுக்கான நியாயமான விலை கிடைக்கவில்லை எனவும், இது குறித்து அரசாங்கம் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version