நீர்கொழும்பில் சுற்றுலா தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், பரேட் சட்டம் மூலம் சொத்துக்களை ஏலம் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் நீர்கொழும்பு சுற்றுலா சங்கம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவைச் சந்தித்து இந்த பிரச்சினைகளை எடுத்துக்கூறிய நிலையில், அவர் குறித்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
இதனையடுத்தே இந்த விடயத்தை பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த சஜித் பிரேமதாச மேற்படி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்,கொரோனா தொற்றுநோய் மற்றும் நாட்டின் வங்குரோத்து நிலை போன்ற காரணங்களினால் நீர்கொழும்பின் சுற்றுலா தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், கடன் வட்டி தற்போது அதிகரித்துள்ளதுடன், பரேட் சட்டம் மூலம் அவர்களது சொத்துக்களை ஏலத்தில் விடவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் வட்டி நிவாரணம் வழங்கி வங்குரோந்தடைந்த நாட்டில் பரேட் சட்டத்தை அமுல்படுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.