இந்தியாவின் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவி, தமிழகத்தின் பாரம்பரிய கலையான வாள்வீச்சில் பயிற்சி பெற்று உலக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, பல பதக்கங்களை வென்றுள்ளார்.
சீனாவில் நடைபெற்றுவரும் ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வாள்வீச்சு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று ஆசிய அளவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்
மேலும், ஜப்பானில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவரின் ஊக்கத்தினையும், விடா முயற்சியினையும் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகத்தில் “விளையாட்டு அலுவலர்” பதவி வழங்கப்பட்டுள்ளதாக அந்நட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இவர் இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி எனும் பெருமையையும் தன்வசப்படுத்தியுள்ளார்.
ஒலிம்பிக் போட்டிகளுக்காக இத்தாலி நாட்டில் பயிற்சி பெற்று வரும் பவானி தேவிக்கு, பயிற்சி செலவுகளுக்காக தமிழ்நாட்டு அரசு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளது.