அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (21.06) நிலையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் பெறுமதி, 298 ரூபாய் 77 சதத்தில் இருந்து 300 ரூபாய் 71 சதம் ஆகவும், விற்பனை பெறுமதி 316 ரூபாயில் இருந்து 318 ரூபாய் வரையும் பதிவாகியுள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாற்றமின்றி 295 ரூபாய் தொடக்கம் 318 ரூபாய் வரை பதிவாகியுள்ளது.
சம்பத் வங்கியிலும், அமெரிக்க டாலரின் கொள்முதல் மற்றும் விற்பனை விகிதங்கள் மாறாமல் 298 ரூபாய் முதல் 315 ரூபாய் வரை காணப்படுகிறது.