விறுவிறுப்பான ஆஷஷ் போட்டியில் ஆஷிக்கு வெற்றி

இங்கிலாந்து மற்றும் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையில் பேர்மிங்ஹமில் நடைபெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி பேட் கமின்ஸின் அதிரடியான துடுப்பாட்டத்தினாலும், உஸ்மன் காவாஜாவின் நிதானமான துடுப்பாட்டத்தினாலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகளடங்கிய தொடரை 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்று முன்னிலையிலுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 78 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 393 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 118 ஓட்டங்களையும், ஜொனி பார்ஸ்டோ 78 ஓட்டங்களையும், சாக் க்ராவிலி 61 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நேதான் லயோன் 4 விக்கெட்களையும், ஜோஷ் ஹசெல்வூட் 2 விக்கெட்களையும், ஸ்கொட் பொலாண்ட், கமரூன் கிறீன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 116.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றது. இதில் உஸ்மன் காவாஜா 141 ஓட்டங்களையும், அலெக்ஸ் காரி 66 ஓட்டங்களையும், ட்ரவிஸ் ஹெட் 50 ஓட்டங்களையும், அலெக்ஸ் காரி 66 ஓட்டங்களையும், பட் கமின்ஸ் 38 ஓட்டங்களையும், கமரூன் கிறீன் 38 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட், ஒல்லி ரொபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களையும், மொயின் அலி 2 விக்கெட்களையும், பென் ஸ்டோக்ஸ், ஜேம்ஸ் அண்டர்சன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி 66.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 273 ஓட்டங்களை பெற்றது. இதில் ஜோ ரூட் 46 ஓட்டங்களையும், ஹரி ப்ரூக் 46 ஓட்டங்களையும், பென் ஸ்டோக்ஸ் 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் நேதான் லயோன், பட் கமின்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்களையும், ஜோஷ் ஹசெல்வூட், ஸ்கொட் பொலாண்ட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

281 என்ற வெற்றியிலக்கோடு துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 92.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 282 ஓட்டங்களை பெற்றது. இதில் உஸ்மன் காவாஜா 65 ஓட்டங்களையும், பட் கமின்ஸ் ஆட்டமிழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஸ்டுவர்ட் ப்ரோட் 3 விக்கெட்களையும், ஒல்லி ரொபின்சன் 2 விக்கெட்களையும், மொயின் அலி, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த போட்டியின் நாயகனாக உஸ்மன் காவாஜா தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version