இலங்கையில் மின் உற்பத்தி செலவை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இலங்கை மின்சார வாரியம், LNGயிற்கு மாற நடவடிக்கை எடுதுள்ளதாக தெரியவருகிறது.
மின் உற்பத்தி பிரச்சினைக்கு உடனடி தீர்வாக இந்திய எரிசக்தி நிறுவனமான பெட்ரோநெட் எல்என்ஜி இந்த திட்டத்தை முன்வைத்துள்ளது.
இது குறித்து இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர மற்றும் பல அதிகாரிகளுக்கு இடையில் இன்று (22.06) கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. இதன்போதே இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளன.
இதன்படி அடுத்த 24 மாதங்களில் மின்சார உற்பத்தியில் செலவைக் குறைக்கும் முயற்சியில், இலங்கை மின்சார வாரியம் (CEB) 600+ MW LNG மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து நீண்ட கால LNG மின் உற்பத்திக்கான தேவையை பூர்த்தி செய்ய தீர்மானித்துள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்தமைக்கு இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகருக்கு அமைச்சர் விஜேசேகர நன்றி தெரிவித்தார்.