மனித மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க பகலில் சிறிது நேரம் தூங்குவது நன்மை பயக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் குழு கண்டறிந்துள்ளது.
லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழு இதனைக் கண்டுபிடித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அந்த ஆராய்ச்சிக்காக 40 முதல் 69 வயதுக்குட்பட்ட 35,080 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட தகவல்கள் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி, பகல்நேர தூக்கம் டிமென்ஷியா மற்றும் பிற நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பகலில் குட்டி தூக்கம் போடுபவர்களுக்கும், தூங்காதவர்களுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதாகவும் இது தொடர்பான ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, பகலில் சிறிது நேரம் தூங்குவது வயதானவர்களின் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுவதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது.