யாழ்ப்பாணத்துக்கான புதிய விமான சேவை முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுற்றுலா துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அறிவித்துள்ளார். DP விமான சேவை யாழ்ப்பாணத்துக்கான விமான சேவையினை ஆரம்பிக்கவுள்ளது. DP விமான சேவையுடன் இணைந்து மேலும் பல உள்ளூர் விமான சேவைகளை ஆரம்பிக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ மேலும் கூறியுள்ளார்.
இந்த விமான சேவை, சுற்றுலாத்துறையினை மேம்படுத்த உதவுமென ஹரின் பெர்னாண்டோ கருத்து வெளியிட்டுள்ளார்.
இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பலாலி விமான நிலையம் வரை இந்த விமான சேவை நடைபெறவுள்ளது. ஒரு வழி பயணத்துக்கு 22,000 ரூபாவும், இரு வழி பயணத்துக்கு 41,500 ரூபா கட்டணமும் அறவிடப்படவுள்ளது. 70 நிமிடங்களில் கொழும்பிலிருந்து யாழுக்கும், யாழிலிருந்து கொழும்புக்கும் பயணிக்க முடியும்
சனி, ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் இந்த விமான சேவை நடைபெறும். மேலதிக விபரங்கள் கீழேயுள்ளன.