தென்னிலங்கையில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!

கொழும்பில் உள்ள பிரபல மகளிர் கல்லூரி ஒன்றில் கல்வி கற்கும் 10 வயது மாணவி ஒருவர் 8 தடவைகள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள சிறுமி ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

குறித்த சிறுமியின் நடத்தையில் மாற்றத்தை உணர்ந்த பாடசாலை ஆசிரியர், வெல்லம்பிட்டிய பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.

இதன்படி சிறுமியை சட்ட வைத்திய அதிகாரி முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, ​​சிறுமி 8 தடவைகள் பாரிய பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

அத்துடன் வெல்லம்பிட்டிய பொலிஸாரால் பெறப்பட்ட சட்ட வைத்திய அறிக்கைகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சிறுமியின் உடலில் சிகரெட்டின் வடுக்கள் இருப்பதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுமியை லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை அளிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்களை கைது செய்யுமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version