கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்தின் பெயர் மாற்றப்பட்டது!

கண்டி கலைமகள் இந்து வித்தியாலயத்திற்கு, விவேகானந்தா கல்லூரி எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தலைமையில், நடைபெற்றது.
கண்டி கல்வி வலயத்திற்கு சொந்தமான இந்த பாடசாலையில், பல்வேறு திறமைகளை கொண்ட ஏராளமான மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

புதிய தொலைநோக்குப் பார்வையுடன் இப்பாடசாலையை மகா விவேகானந்தா கல்லூரியாகப் பரிந்துரைத்துள்ளதாக கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில், உதவிக் கல்விப்பணிப்பாளர் மாயாதுன்னே, மத்திய மாகாண தலைவர் மற்றும் கல்வி அமைச்சு உதவி கல்விப் பணிப்பாளர், சாமரி அந்தரகே, வலயக்கல்வி பணிப்பாளர் சத்தியேந்திரா உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version