பொலன்னறுவையில் பதுக்கிவைப்பட்டிருந்த மருந்துகள் அழிப்பு!

பொலன்னறுவையில் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான காலாவதியான மருந்துகள் அழிக்கப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டம் மனம்பிட்டிய கிராமிய வைத்தியசாலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த காலாவதியான மருந்துகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2017ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டு விடுதிகளில் மில்லியன் கணக்கான மருந்துகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் மருந்துப் பொருட்களின் கையிருப்பு அழிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மருந்து தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், 2017ஆம் ஆண்டு இந்த மருந்துகளை வழங்காமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்தி அவற்றை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version