2010 ஆண்டு போராட்ட வழக்கு பிரதிவாதிகள் விடுதலை

2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் கொழும்பு கல்வியமைச்சுக்கு முன்னாள் நடைபெற்ற போராட்டத்தில் சட்டத்துக்கு புறம்பாக ஒன்று கூடியது, பொலிஸாருக்கு காயம் ஏற்படுத்தியமை, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை அடங்கலாக 29 குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்த பல்கலைக்கழ மாணவர்கள் குறித்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிரான குற்றங்களை நிரூபிக்க போதியளவு ஆதாரங்கள் இல்லாமையினால் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அப்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க பேராதனை பல்கலைக்கழத்துக்கு சென்ற போது அவரை கொச்சைப்படுத்தியதாக குற்றம் சுமத்தி சிறை வைக்கப்பட்ட பேராதனை பல்கலைக்கழக மாணவர் குழுவொன்றை விடுவிக்கக் கோரி அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கல்வி அமைச்சுக்கு வெளியில் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது.

இந்த போராட்டத்தின் போது பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை கடுமையாக தாக்கி காயமைடயச் செய்திருந்தனர். இந்த சம்பவத்தில் உள்ளூர், வெளிநாட்டு ஊடகவியலாளர் என பலர் தாக்கப்பட்டிருந்தனர். அதேவேளை 21 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version