பாணந்துறை பிரதேசத்தில் அரசாங்க பெண் சட்டத்தரணி ஒருவர் மீது கத்தி குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாணந்துரை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்கு அருகில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது.
அரசாங்க சட்டத்தரணியுடன் நீண்ட காலமாக தகாத உறவில் ஈடுபட்டிருந்த முன்னாள் இராணுவ சிப்பாய் ஒருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
சமீபகாலமாக பெண் சட்டதரணி குறித்த சிப்பாயினை தவிர்த்து வந்தமையால், இந்த தாக்குதலை அவர் மேற்கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது பாணந்துறை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கடமையில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து உத்தியோகத்தர் ஒருவருக்கும் சிறு வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், சம்பவத்தில் காயமடைந்த இருவரும் வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.