மின்கட்டண திருத்தம் குறித்து மக்களின் கருத்துக்களை பெற நடவடிக்கை!

மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுமக்களின் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்காக விசேட மக்கள் கலந்தாய்வு அமர்வு ஒன்று நடத்தப்பட உள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி இது தொடர்பான பொது கலந்தாய்வு அமர்வு எதிர்வரும் (ஜூன் 27) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது அல்லது குறைப்பது தொடர்பில் பொதுமக்கள் தமது கருத்துக்களைச் சமர்ப்பிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என பொதுப் பயண்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை சேர்ந்தவர்கள் உட்பட எவரும் இந்த அமர்வின்போது தங்களது கருத்துக்களை முன்வைக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version