உலகப் பொருளாதாரம் இப்போது பணவீக்கத்தை கட்டுப்படுத்த போராடும் ஒரு முக்கிய கட்டத்தில் இருப்பதாக உலகின் மத்திய வங்கி அமைப்பு எச்சரித்துள்ளது.
உலகின் மத்திய வங்கி அமைப்பு மற்றும் சர்வதேச தீர்வுகளுக்கான வங்கிய ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக அதிக வட்டி விகித உயர்வுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
கடந்த 18 மாதங்களில் இடைவிடாத உயர்வு இருந்தபோதிலும், பல உயர்மட்ட பொருளாதாரங்களில் பணவீக்கம் அதிகமாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன், உலகப் பொருளாதாரம் ஒரு கடுமையான கட்டத்தில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடுமையான சவால்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், குறுகிய கால வளர்ச்சியை தொடரவேண்டிய நேரம் கடந்துவிட்டதாகவும் வங்கி அமைப்பு தெரிவித்துள்ளது.
நிதிக் கொள்கை ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ள அதேநேரம் பணவீக்க நிலை உளவியல் அபாயங்களை தோற்றுவித்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகின் பெரும்பாலான பகுதிகளில், பணவீக்கத்தின் எழுச்சி பரவலான நிதிப் பாதிப்புகளுடன் இணைந்திருப்பது இதுவே முதல் முறை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.