வைத்திய நிபுணர்கள் சேவையிலிருந்து ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 63 ஆக நீட்டிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த வழக்கின் தீர்ப்பு இன்று (27.06) வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
63 வயது வரை சேவையாற்ற வேண்டிய காலத்தை 60 ஆக மாற்றியமை நியாயமற்றது என 176 வைத்திய நிபுணர்களால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நாட்டில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு இது ஒரு மிகப்பெரிய காரணம் என்பதால் ஓய்வு பெறும் வயதை 63 ஆக மாற்ற வேண்டும் என்று வைத்திய நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.