‘சவரக்கத்தி’ இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில், தார்த், பூர்ணா மற்றும் ஆதித் அருண் ஆகியோரின் நடிப்பில் உருவாகி வரும் “டெவில்” திரைப்படத்தில் இயக்குனர் மிஸ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் முத்துகுமார் ஒளிப்பதிவு செய்யவுள்ளதுடன், முக்கிய கதாபாத்திரத்தில் மிஸ்கின் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மிஷ்கின் இசையமைத்துள்ள “டெவில்” படத்தின் முதல் பாடலான “கலவி” பாடலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிட படக்குழு தீர்மானித்துள்ளது.