இலங்கை அணி முதலிடத்தில் சுப்பர் 6 ஐ ஆரம்பிக்கிறது

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் தெரிவுகாண் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று குழு B இல் முதலிடத்தை பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சுப்பர் 6 தொடரை இலங்கை அணி முதலிடத்தில் ஆரம்பிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இன்றைய(27.06) போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 49.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் பத்தும் நிஸ்ஸங்க 75 ஓட்டங்களையும், சரித் அசலங்க 63 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் கிரீஸ் கிரீவ்ஸ் 4 விக்கெட்களையும், மார்க் வட் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

பதிலுக்கு துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி 29 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 163 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் கிரீஸ் கிரீவ்ஸ் 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் மஹீஸ் தீக்க்ஷன 3 விக்கெட்களையும், வனிந்து ஹசரங்க 2 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.

மற்றுமொரு போட்டியில் அயர்லாந்து அணி ஐக்கிய அரபு அமீரக அணியை 138 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பாடிய அயர்லாந்து அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 349 ஓட்டங்களை பெற்றது. இதில் போல் ஸ்டெர்லிங் 162 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் சஞ்சிட் ஷர்மா 03 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஐக்கிய அரபு அமீரக அணி 39 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 211 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் முஹமட் வசீம் 45 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்துவீச்சில் ஜோஸ் லிட்டில், அன்டி மக்பிரைன், ஜோர்ஜ் டொக்ரல், கேர்ட்டிஸ் கம்பர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

இந்த இரண்டு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்துள்ளன. இலங்கை அணி 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது. ஸ்கொட்லாந்து அணி மூன்று போட்டிகளில் 6 புள்ளிகளைப் பெற்று இரண்டாமிடத்தை பெற்றுள்ளது. இந்தக் குழுவில் ஓமான் அணி 4 புள்ளிகளைப் பெற்று அடுத்த சுற்று வாய்ப்பை பெற்றுள்ளது.

இந்தக் குழுவிலிருந்து தெரிவான அணிகளான ஸ்கொட்லாந்து மற்றும் ஓமான் அணிகளை வெற்றி பெற்ற இலங்கை அணி 4 புள்ளிகளையும் அதற்கான ஓட்ட நிகர சராசரி வேகத்தையும் சுப்பர் 6 சிக்ஸ் தொடருக்கு எடுத்து செல்கிறது. சிம்பாவே அணியும் அதே போன்று குழு A இலிருந்து 4 புள்ளிகளை எடுத்துச் சென்றுள்ளது. ஓட்ட நிகர சராசரி வேகம் அதிகமாக இலங்கைக்கு இருப்பதானால் முதலிடம் இலங்கைகு கிடைத்துள்ளது. சுப்பர் 6 குழுவில், முதல் சுற்றில் மோதிய அணிகள் மோதாது. மீதமுள்ள மூன்று அணிகளும் மோதும், அவற்றின் பின்னர் முதலிரு இடங்களை பெறுமணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெறும்.

வியாழன், 29 ஜூன்
சிம்பாப்வே v ஓமன், குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

வெள்ளிக்கிழமை, 30 ஜூன்
இலங்கை v நெதர்லாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

சனிக்கிழமை, 1 ஜூலை
ஸ்காட்லாந்து v மேற்கிந்திய தீவுகள் , ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

ஞாயிறு, 2 ஜூலை
சிம்பாப்வே v இலங்கை, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

திங்கள், 3 ஜூலை
நெதர்லாந்து v ஓமன், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

செவ்வாய், 4 ஜூலை
சிம்பாப்வே v ஸ்காட்லாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

புதன், 5 ஜூலை
மேற்கிந்திய தீவுகள் v ஓமன், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

வியாழன், 6 ஜூலை
ஸ்கொட்லாந்து v நெதர்லாந்து, குயின்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப்

வெள்ளிக்கிழமை, 07 ஜூலை
இலங்கை vs மேற்கிந்திய தீவுகள், ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

ஞாயிற்றுக்கிழமை, 09 ஜூலை
இறுதிப் போட்டி – ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்

இலங்கை அணி முதலிடத்தில் சுப்பர் 6 ஐ ஆரம்பிக்கிறது
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version