கிளிநொச்சி உதய நகரில் இன்று (28.06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதில் காரின் சாரதியான 38 வயதுடையவரே காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு ஆயுததாரிகள், காரில் பயணித்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் கனகபுரம் நோக்கி சென்ற போது காயமடைந்தவருக்கும், மேலும் இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அதற்கு பழி வாங்கும் நோக்கிலேயே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது .
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.