வவுனியா கல்வியியல் கல்லூரியின் வளப்பற்றாக்குறையை பார்வையிட்டார் பா.உ திலீபன்!

வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியில் நிலவும் வளப்பற்றாக்குறை உட்பட கல்லூரியின் பௌதீக வளங்களின் குறைப்பாடுகள் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு. திலீபன் நேற்று (27.06) பார்வையிட்டார்.

தேசிய கல்வியில் கல்லூரியின் பீடாதிபதி குணரட்ணம் கமலகுமார் தலைமையிலான குழுவினர் பாராளுமன்ற உறுப்பினருக்கு கல்லூரியில் நிலவும் குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்போது ஆசிரிய மாணவர்களின் வசதி கருதி அமைக்கப்பட்ட கட்டிடங்கள் பல கட்டிடத்திணைக்களத்தின் அசமந்தப்போக்கால் பல ஆண்டுகளாக நிறைவுறாது காணப்படுகின்றமை, கேட்போர் கூடத்தில் மேற்கொள்ளப்பட்ட தரமற்ற வேலைகள், சுற்றுமதிலின் ஒரு பகுதி அமைப்பத்தில் ஏற்படும் கால தாமதம், ஆசிரிய மாணவர் விடுதி பயன்படுத்தமுடியாமல் காணப்படுகின்றமை மற்றும் நீர்த்தாங்கி பிரச்சனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினருக்கு சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சில திணைக்கள தலைவர்களுடன் உடனடியாக தொலைபேசியில் தொடர்புகொண்டு காலதாமதமாகும் பணிகளை உடனடியாக செய்வதற்கு உத்தரவிட்டிருந்ததுடன் ஊழியர் பற்றாக்குறை மற்றும் ஒப்பந்த அடிப்படையிலான தொழிலார்களை நிரந்தரமாக்குவது தொடர்பான விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் வாரங்களில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் இடம்பெறவுள்ள சந்திப்பில் இவ்விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும் தெரிவித்திருந்தார்.

வவுனியா கல்வியியல் கல்லூரியின் வளப்பற்றாக்குறையை பார்வையிட்டார் பா.உ திலீபன்!
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version