கொழும்பு -யாழ்ப்பாணம் ரயில் சேவைகளை மீள ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவையை மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய அடுத்த மாதம் 15 ஆம் திகதி முதல் இந்த சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆசன பதிவுகள் உள்ளிட்ட மேலதிக விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்களின் பின்னர் இறுதி முடிவு எட்டப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் சமன் பொல்வத்தகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு – யாழ்ப்பாணத்திற்கான ரயில் சேவை ஜனவரி 5 ஆம் திகதி முதல் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வடக்கு ரயில் மார்க்கத்தின் அநுராதபுரம் முதல் ஓமந்தை வரையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான நேரடி ரயில் சேவை அநுராதபுரம் ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்தியாவின் நிதி உதவியுடன் வடக்கு ரயில் மார்க்க திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. திருத்த வேலைகள் முடிந்த பின்னர் காங்கேசன்துறையில் இருந்து அநுராதபுரத்திற்கு மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் பயணிக்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்நிலையில் ரயில் சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version