பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்ட இலங்கை பிரஜை!

இலங்கை பிரஜை ஒருவர் பிலிப்பைன்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜுன் மாதம் 19 ஆம் திகதி இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 28 வயதுடைய Mifras Mohamed Mohamed Munawfer, என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விசாரணைகளின்போது, அவர் அங்க தங்கியிருக்கும் போது சில நிபந்தனைகளை மீறியதாகவும், விரும்பத்தகாத தன்மை காரணமாக கைது செய்ய உத்தரவிடப்பட்டதாகவும் குடிவரப்பு பணியம் தெரிவித்துள்ளது.

குறித்த இலங்கை பிரஜை, 16 திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடியேற்ற நாடுகடத்தல் வழக்கை தவிர முனாஃபர் பல உள்ளுர் வழக்குகளை எதிர்கொள்ளவுள்ளதாக குடிவரவு பணியகத்தின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version