தப்பி பிழைத்த சிம்பாவே.

சிம்பாவேயில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண தொரிவுகாண் தொடரின் சுப்பர் 6 போட்டியில் சிம்பாவே அணி ஓமான் அணியை 14 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் சுப்பர் 6 தொடரில் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இந்தப் போட்டியில் முதலில் துடிப்பாடிய சிம்பாவே அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதில் சீன் வில்லியம்ஸ் 142 ஓட்டங்களையும், லூக் ஜொங்வே 43 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பயாஸ் பட் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பாடிய ஓமான் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்தது 318 ஓட்டங்களை பெற்றது. இதில் காஷியப் பிரஜபட்டி 102 ஓட்டங்களையும், அயான் கான் 47 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பிளெஸ்ஸிங் முஷரபாணி, ரண்டாய் சட்டாரா ஆகியோர் தலா 3 விக்கெட்களை கைப்பற்றினார்கள்.

நாளை (30.06) இலங்கை அணி நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version