பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த மாரி செல்வராஜின் இயக்கத்தில் தற்போது மாமன்னன் படம் வெளியாகி இருக்கிறது.
உதயநிதியின் கடைசி படமாக இருக்கும் இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் தன்னுடைய கடைசி படத்தை மறக்க முடியாத அளவுக்கு இயக்கி கொடுத்த மாரி செல்வராஜுக்கு உதயநிதி ஒரு அன்பு பரிசை வழங்கியுள்ளார்.
அந்த வகையில் உதயநிதி இயக்குனருக்கு மினி கூப்பர் கார் ஒன்றை பரிசளித்திருக்கிறார். அதன் விலையே கிட்டத்தட்ட 40 முதல் 45 லட்சம் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து உதயநிதி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,” ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக விவாதிக்கிறார்கள்.
தங்களுடைய எண்ணங்களை கதையுடனும் களத்துடனும் தொடர்புபடுத்தி கருத்துகளை பகிர்கிறார்கள். உலகத் தமிழர்களிடையே விவாதத்துக்குரிய கருப்பொருளாக மாறியிருக்கிறது.
அம்பேத்கர், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற நம் தலைவர்கள் ஊட்டிய சுயமரியாதை உணர்வை, சமூகநீதி சிந்தனைகளை இளம் தலைமுறையினரிடம் விதைத்துள்ளது. வணிகரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி.
ரெட் ஜெய்ன்ட் மூவிஸ் நிறுவனம் மாரி செல்வராஜ் சாருக்கு மினி கூப்பர் கார் வழங்கி மகிழ்ந்தது. உலகம் முழுவதும் பறக்க ‘மாமன்னனுக்கு றெக்கை அளித்த என் மாரி செல்வராஜ் சாருக்கு நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Pழளவ ஏநைறள: 4