சுகாதாரத்துறையை சீரழிக்கும் வகையில் செப்டெம்பர் மாதத்தில் வேலை நிறுத்தம் ஒன்றை முன்னெடுக்க குழுவொன்று திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது என சுகாதாத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
”ஸ்திரமான நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைவோம்” என்ற தொனிப்பொருளில் நேற்று (02.07) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் மருத்துவ விநியோகத் துறையை மீட்க எவ்வளவு காலம் எடுக்கும்? எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் இந்த ஆண்டு இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குழுக்களை சீர்குலைக்கும் முயற்சியில் செப்டம்பர் மாதம் வேலைநிறுத்தங்கள் தொடங்கப்படும் என்று தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் கூறினார்.
அத்துடன் தற்போது, எங்கள் மத்திய மருந்தகத்தில் இருக்க வேண்டிய 190 மருந்துகளில் 800 வரை குறைந்துள்ளதாகவும், மருத்துவமனைகளில் சுமார் 90 மருந்துகள் குறைவில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது சம்பந்தமான விரிவான அறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்.