வெல்லாவெளி பிரதேசத்தில் சுகாதார மற்றும் சமூக சேவைகளை ஒன்றிணைக்கும் நடமாடும் சேவை!

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் திணைக்களங்களின் சேவைகளை ஒன்றிணைக்கும் நடமாடும் சேவை, பிரதேச செயலாளர் ஆர். ராகுலநாயகியின் வழி நடத்தலில் இன்று (04.07) திருபழுகாமம் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.

வெல்லாவெளி பிரதேசத்தில் சுகாதார மற்றும் சமூக சேவைகளை ஒன்றிணைக்கும் நடமாடும் சேவை!

இந் நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலக சமூக சேவை பிரிவுக்கான சேவைகள், காணி, பதிவாளர், தேசிய அடையாள அட்டை மற்றும் சமுர்த்தி போன்ற பிரிவுகளுக்கான சேவைகள் உட்பட மாட்ரிதிறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான சேவை, மூக்கு கண்ணாடி, ஆயுர்வேத மற்றும் உளநல மருத்துவ சேவைகள், பற்சிகிச்சை முகாம் போன்ற சேவைகள் பிரதேச மக்களுக்கு வழங்கப்பட்டன.

இதன்போது போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தால் உடல் திணிவுச் சுட்டெண், நீரிழிவு பரிசோதனைளும் இடம் பெற்றன. இச்சேவைக்கு வருகை தந்தவர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட இலைக்கஞ்சி விநியோகிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் வி. துலஞ்சனன், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கண் சத்திர சிகிச்சை நிபுணர், பல் வைத்திய நிபுணர், களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர், கோவில்போரதீவு ஆயுர்வேத மத்திய மருந்தக உத்தியோகத்தர்கள், போரதீவுப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட போரதீவுப்பற்று சமுர்த்தி தலைமையக முகாமையாளர், மேலதிக மாவட்ட பதிவாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இந்நடமாடும் சேவை ‘ஹோப் அவுஸ்ரேலியா’ நிறுவனத்தின் அனுசரணையில் இடம்பெற்றுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version