சர்வதேச ரக்பி கூட்டமைப்பு பிரதிநிதிகளிளுடன் விசேட கலந்துரையாடல்!

சர்வதேச ரக்பி சம்மேளனத்தின் பிரதிநிதிகள் மற்றும் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இன்று (04.07) விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சில் இடம்பெற்றது.

சர்வதேச ரக்பி கூட்டமைப்பு பிரதிநிதிகளிளுடன் விசேட கலந்துரையாடல்!

இந்த சந்திப்பில் இலங்கை ரக்பியின் தற்போதைய நிலை குறித்து சாதகமான மற்றும் பயனுள்ள பல விடையங்கள் கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை வீரர்கள் மீண்டும் சர்வதேச போட்டிகளில் இணையும் விடையங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

பெயரளவில் இயங்கும் (பேப்பர் கிளப்) ரக்பி கழகங்கள் குறித்து அடுத்த சில நாட்களில் மாவட்ட, மாகாண ரக்பி சம்மேளனங்கள், தொழிற்சங்க அதிகாரிகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களுடன் கலந்துரையாடப்படும் என சர்வதேச சம்மேளனத்தின் பிரதிநிதிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசிய ரக்பி சம்மேளனம் தொடர்பாக சர்வதேச ஒலிம்பிக் குழுவிற்கு தேசிய ஒலிம்பிக் குழு அனுப்பிய கடிதத்தின் பிரதி சர்வதேச ரக்பி சம்மேளனத்திடம் கிடைக்கப்பெற்றதாகவும், இது தொடர்பில் எதிர்காலத்தில் விரிவாக கலந்துரையாட எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில், உலக ரக்பி சம்மேளனத்தின் தலைமை சர்வதேச உறவுகள் மற்றும் பங்கேற்பு அதிகாரி திரு. டேவிட் கேரிகி, ஆசியாவின் பிராந்திய கூட்டாண்மை முகாமையாளர் திரு. ரிட்சல் சாட், ஆசிய ரக்பி சம்மேளனத்தின் இடைக்கால குழுவின் தலைமை நிர்வாக அதிகாரி பெஞ்சமின் வான் ரூயன், ஜனாதிபதியின் சட்டத்தரணி மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் சுமதி தர்மவர்தன, சட்டத்தரணி ராஜித அலுவிஹார, ரக்பி ஸ்திரப்படுத்தல் குழுவின் தலைவர் சூலா தர்மதாச, ரக்பி தொடர்பான அனைத்து விடயங்களுக்கும் அமைச்சரின் இணைப்பாளர் அசார்டின் உள்ளிட்ட அதிகாரிகள் குழு மற்றும் அமைச்சின் செயலாளரும் கலந்து கொண்டனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version