யாழில் அதிகரிக்கும் டெங்கு!

யாழ்ப்பாணத்தில் 1,491 டெங்கு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1,843 பேர் டெங்கு தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் 1,491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக 1,843 டெங்கு தொற்றாளர்கள் இதுவரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வடக்கு மாகாணத்தின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத்திலேயே அதிகளவில் டெங்கு தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொதுமக்கள் இயன்றளவு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என சுகாதார பிரிவினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version