அமெரிக்க வெள்ளை மாளிகையில் கொக்கைன் போதைப்பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா மாவட்ட தீயணைப்புத் துறை, பொருளை மதிப்பிடுவதில் உதவியதாக இரகசிய சேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கொக்கைன் போதைப் பொருள் கண்டுப்பிடிக்கப்பட்டதை தொடர்ந்து வெள்ளை மாளிகை தற்காலிமாக மூடப்பட்டு மக்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர்.
இதன்போது அமெரிக்க ஜனாதிபதி பைடன் வெள்ளை மாளிகையில் இல்லை எனவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.