தொடர்ந்து பெய்துவரும் கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக கொழும்பின் பல இடங்களிலும், வீதிகளில் மரம் முறிந்து விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக பல வீதிகளில் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டுள்ளதுடன், சில வீதிகளில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவே பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் கவனமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வாகன நெரிசல் மிகுந்த வீதிகளை தவிர்த்து மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
