இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை கீழ் பிரிவு தோட்டத்தில் உள்ள லயன் தொகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 20 குடியிருப்புகள் அடங்கிய இரண்டு பகுதிகளை கொண்ட இலக்கம் (06) தொடர் லயன் தொகுதியில் இன்று (05.07) காலை 10.30 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்டபட்டுள்ளதாக இராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்தில் குறித்த பகுதியில் இருந்த அனைத்து குடியிருப்புகளுக்கு சேதம் ஏற்டபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்த தோட்ட மக்களும் இளைஞர்களும் முயற்சித்து வரும் நிலையில், பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.