லியோவில் இணைவாரா தனுஷ்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிபில், அனிருத்தின் இசையமைபில், தளபதி
விஜய் நடிப்பில் உருவாகி ‘லியோ’ திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.

அண்மையில் இத்திரைப்படத்தின் இடம்பெற்ற “நா ரெடி” பாடலும் வெளியாகி சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு ரசிகர்களாற் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் தனுஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன.

Social Share

Leave a Reply