தேசிய லொத்தர் சபை மற்றும் அபிவிருத்தி லொத்தர் சபை இரண்டும் அதிக இலாபம் ஈட்டும் நிறுவனங்களாக இருந்தாலும் லொத்தர் சீட்டு ஒன்றின் விலையை 20 ரூபாவிலிருந்து 40 ரூபாவாக நிதியமைச்சு அதிகரித்துள்ளதுள்ளதாகவும், இவ்வாறு லொத்தர் சீட்டின் விலையை அதிகரிப்பதற்கு ஏதுவான ஏதேனும் அளவுகோல்கள் மற்றும் காரணங்கள் உள்ளனவா? என தாம் வினவுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05.07) பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.
அவ்வாறு நிறுவனத்தின் வருமானம் குறைந்திருந்தால், நிறுவனத்தால் தேவையற்ற செலவுகளைக் குறைக்க ஏன் முடியவில்லை? எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் கேள்வி எழுப்பினர்.
இந்த நிறுவனங்களுக்கு 65 இலட்சம் ரூபா வாடகை செலுத்துவதற்குப் பதிலாக வேறு அரச கட்டிடத்தை இதற்காக பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் பணத்தை மீதப்படுத்த முடியும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் ஆலோசனை கூறியுள்ளார்.
2018 இல் லொத்தர் விற்பனை முகவர்களுக்கு வழங்கப்படும் கமிஷனில் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என உறுதியளித்த போதிலும் இதுவரை 25 சதமே அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும்,எனவே மீதமுள்ள 25 சத்தை வழங்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.